பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு தேவைப்படுவதாக நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலம் கோரிக்கை சமர்ப்பிக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தகைய கோரிக்கைகள் பெறப்பட்ட பின்னர் உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு நடத்தி உண்மையில் பாதுகாப்பு தேவைப்படுவது உறுதியானால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.