இன்று (03) மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் முச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த இரண்டு பெண்கள் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
