Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வருமான வரி சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை 

Posted on November 5, 2025 by Admin | 298 Views

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுகளை சமர்ப்பிப்பது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டு ஆண்டுக்காக வருமான வரிக்குப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தமது வருமான வரி விபரத்திரட்டுகளை நவம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இணையவழியாக சமர்ப்பிக்க வேண்டும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறிப்பிடப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் விபரத்திரட்டை சமர்ப்பிக்கத் தவறும் நபர்கள் மீது, 2017ஆம் ஆண்டு எண் 24 உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு 1944 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது www.ird.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். அதேபோல், அருகிலுள்ள உள்நாட்டு இறைவரிப் பிராந்திய அலுவலகத்திலும் தேவையான தகவல்களைப் பெற முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.