சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (Social Security Contribution Levy) அமுலுக்கு வருவதால் வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பல்வேறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய கணக்கீடுகளின் படி சுமார் ஒரு கோடி ரூபாய் (100 இலட்சம்) மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தின் விலை புதிய வரி காரணமாக சுமார் 2.5 லட்சம் ரூபாயால் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வாகன விலையில் சுமார் 2.5 சதவீத உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.