காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, போர் நிறுத்தம் அமல்பெற்ற கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இதுவரை குறைந்தது 241 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 619 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களின் தொடர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.