(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை , அல்-முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலையின் புதிய அதிபராக ஏ. எல். யாசீன் (SLPS–I) இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.H.M. ரஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் முன்னாள் அதிபர் எம். ரீ. சியாத் அவர்களிடமிருந்து புதிய அதிபர் ஏ. எல். யாசீன் அவர்கள் பொறுப்புகளைப் பெற்றுக்கொண்டார்.
இவர் அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடத்திய நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று அதே அமைச்சின் செயலாளர் அவர்களால் அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
ஏ. எல். யாசீன் அவர்கள் அக்கரைப்பற்று காதிரியா வித்தியாலயம், அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை இக்ரஃ வித்தியாலயம் மற்றும் அல்-ஜென்னா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றியுள்ளதுடன் அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் மற்றும் ஒலுவில் அல்-ஹம்ரா மகா வித்தியாலயங்களில் பிரதி அதிபராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார்.
மொத்தம் 28 ஆண்டுகளாக கல்வித் துறையில் ஆசிரியர் மற்றும் அதிபர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அதிபர் ஏ. எல். யாசீன் அவர்கள் தற்போது பொறுப்பேற்ற அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலையின் பழைய மாணவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.