அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17)தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறை மற்றும் அரசு வைத்தியர்களைச் சுற்றியுள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாததை எதிர்த்து இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு முன்பே அறிவித்திருந்தபோதிலும், இதுவரை எவ்வித நேர்மறையான பதிலும் கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.