பாடசாலைக்கு தாமதமாக வந்ததற்காக வழங்கப்பட்ட தண்டனையால் மகாராஷ்டிராவில் ஆறாம் வகுப்பு மாணவியின் உயிர் காவு கொள்ளப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சமாகியுள்ளது.
தாமதமாக வந்த மாணவியை 100 முறை எழுந்து–இரு என ஆசிரியர் கட்டளையிட்டதாகவும் மாணவி அதனைச் செய்ததாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னமே முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருந்த அம் மாணவி இத்தண்டனையின் போது முதுகுவலியால் தவித்ததாக கூறப்படுகிறது. நிலை மேலும் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் பாடசாலை நிர்வாகத்துக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.