(ஆலங்குளம் செய்தியாளர்)
அட்டாளைச்சேனை ஆலம் குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஆடைத்தொழிற்சாலை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை ஆலம் குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சிறிய ஆடைத்தொழிற்சாலை நேற்று (19.11.2025) புதன்கிழமை திறக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியஸ்திஸ்ஸ, சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவும் கலந்துகொண்டார்.
மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், பிரதியமைச்சரின் இணைப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஆடைத்தொழிற்சாலையானது உள்ளூர் மக்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கும் களமாக இது அமைந்துள்ளது.



