(ஊடகப்பிரிவு)
ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு ..!
பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்களுக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.ஏம் ஹிஸ்புல்லாஹ், இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுவதோடு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.
இனங்களுக்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் விதமாக உரையாற்றும் மதகுருமார்கள் உட்பட அனைவருக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள விஷேட சட்டமென்றை பாராளுமன்றின் கொண்டுவருமாறும் அதற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழித்து எம் மக்களை இதிலிருந்து முழுமையாக பாதுகாக்க வேண்டும் எனவும் போதை ஒழிப்புக்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளுக்கும் தாம் முழுமையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் ஆதரவையும் வழங்க தயார் எனவும் தெரிவித்தார்.
இதன்போது, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.