அரசியலில் அன்பான ஆதரவாளர்கள் இருப்பதைப் போல, அழிக்க துடிக்கும் எதிரிகள் இருப்பதைப் போல, கூட இருந்து குழி பறிக்கும் நயவஞ்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகி பிணை பெற்றது தொடர்பாக அவரவர் தேவைக்கேற்றாற் போல் வியாக்கியானம் செய்து பழி தீர்த்துக் கொள்ளவும், அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றி சிற்றின்பம் பெறவும் முனைவோருக்குமான ஒரு பதிவே இது.
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எனது ஒருங்கிணைப்பாளராக இருந்தவர், நம்பிக்கைப் பொறுப்பினடப்படையில் அவரிடம் வழங்கப்பட்டிருந்த காசோலையொன்றை ஏமாற்றும் நோக்கில் ஏற்கனவே அது அழிந்துவிட்டதாக என்னை நம்பச் செய்து, அரசியல் ரீதியாக ஒரு பிணக்கு ஏற்பட்டவுடன் அரசியல் எதிரிகளோடு கைகோர்த்து , பழி வாங்கும் நோக்குடன் ஏலவே கையொப்பமிடப்பட்டு வழங்கப்பட்டிருந்த காசோலையில் 15 மில்லியன் ரூபாவை மோசடியாக எழுதி வங்கியில் வைப்புச் செய்து , திரும்பிய காசோலையை, அம்பாறை scib இல் முறைப்பாடு செய்து என்னை கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த நபருக்கெதிராக ஏற்கனவே சிவில் வழக்கு என்னால் தொடரப்பட்டதோடு , அவரால் சோடிக்கப்பட்ட வழக்கு தொடர்பில் என்னை கைது செய்ய எத்தணிக்கப்படுவதை மேற்கோள் காட்டி இன்றைய தினம் எனது சட்டத்தரணி மூலமாக முன்பிணை கோரி விண்ணப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கெடுக்கப்பட்ட பின்னர் வழக்கின் நிலையை புரந்து கொண்ட நீதிமன்றம் நகர்த்தல் விண்ணப்பமூடாக குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த போது இது சோடிக்கப்பட்ட வழக்கென்பது இலகுவாக ஊகிக்கூடியதாக இருந்ததாலும், இந்த முறைப்பாட்டின் பேரில் எனக்கு பிணை மறுக்கப்படுவதற்கான காரணிகள் எதிர்த்தரப்பால் சரியாக முன்வைக்கப்படாமல் மாறாக எனது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட எனது பிணை கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இன்றைய தினம் பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த வழக்கின் முதல் வெற்றி இது. இன்சா அல்லாஹ் இறைவன் அருளால் இந்த சோடிக்கப்பட்ட வழக்கிலும் ,என்னால் தொடரப்பட்டுள்ள சிவில் வழக்கிலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் நான் உள்ளேன்.
இது நீதிமன்றில் உள்ள வழக்கு. அரசியல் உள்நோக்கம் இருந்தாலும் தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான வழக்கு. நீதிமன்றில் உள்ள வழக்கு தொடர்பில் உங்கள் அரசியல் , தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளையும் , வன்மத்தையும் பொது வெளியில் தெரிவிக்க முனைந்து, வீணாக நீதிமன்றில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எவரும் ஆளாக வேண்டாம்.
சத்தியம் வெல்லும்! பொய்மை அழிந்து போகும்! நீதி நிலைத்து நிற்கும்!