Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 20, 2025

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும்(27) நாளையும்(28) உயர் தரப் பரீட்சை நடைபெறாது

Posted on November 27, 2025 by Admin | 115 Views

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் மோசமான வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலைகளின காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியானகே வெளியிட்ட விசேட அறிக்கையில் இன்று (நவம்பர் 27) மற்றும் நாளை (நவம்பர் 28) ஆகிய தினங்களில் நடத்தப்பட வேண்டிய பரீட்சைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.