சீரற்ற வானிலையால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் நாளை (1) அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினி கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினர் வேகமாக பணிபுரிந்து வருவதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் குருநாகல், களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, கண்டி, காலி, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் இணையவழி அலுவலகங்களில் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல், புதிய அனுமதிப்பத்திரம் விண்ணப்பித்தல் மற்றும் அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படமாட்டாது.
அத்துடன் இந்த கோளாறு வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றம் போன்ற பிற அமைப்புகளை பாதிக்காததால் அவை வழக்கம்போல் செயல்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.