(கல்முனை செய்தியாளர்)
கம்பளை பிரதேச செயலகத்தில் நேற்று(30) நடைபெற்ற அனர்த்த நிவாரணக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முக்கியமான கருத்துகளை முன்வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர், கண்டி தெற்கு நீர் வழங்கல் சபையின் மேலதிகாரியுடன் சந்தித்து, சில பகுதிகளில் நீர் மாசடையும் அபாயம் இருப்பதால், மக்கள் பாதுகாப்பிற்காக சுத்திகரிக்கப்பட்ட தூய நீரை தொடர்ந்து வழங்குவது அவசியம் என வலியுறுத்தினார்.
பின்னர், கம்பளை – கஹடப்பிட்டிய, போதலபிட்டிய, இல்லவத்துறை, ஆண்டியாகடவத்தை, தொலுவ, நியூ எல்பிடியா, கல்கமுக, தௌலகல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து, நிலைமைகளைப் பற்றி அறிந்துகொண்டார்.

