Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 19, 2025

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ள சாரதிகளுக்கான அறிவிப்பு

Posted on December 1, 2025 by Admin | 174 Views

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம் உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களின் காரணமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை நேரத்தில் புதுப்பிக்க முடியாத சாரதிகளுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கப்படுகின்றது.

காலாவதியான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கச் செல்ல முடியாத நிலை பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, 2025 நவம்பர் 25 முதல் 2025 டிசம்பர் 25 வரை காலாவதியாகும் ஓட்டுநர் உரிமங்களுக்கான விசேட சலுகைக் காலத்தை அறிவிக்க மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இந்த அவகாசக் காலத்தில் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்தாலும் அது போக்குவரத்து விதி மீறலாக கருதப்படாது என போக்குவரத்து ஆணையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவு தொடர்பான அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.