Top News
| தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் சைக்கிளின் சிக்னல் ஒளிராமை தொடர்பான வழக்கில் 3200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது | | ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில் |
Dec 18, 2025

அட்டாளைச்சேனை 07ம் பிரிவு மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைப்பு

Posted on December 3, 2025 by Admin | 119 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பணிகள் இளைஞர் அமைப்புகள், பள்ளிவாசல்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகம், பிரதேச சபையின் ஒருங்கிணைப்பில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நடை பெற்று வருகிறது.

அட்டாளைச்சேனை 07ஆம் பிரிவைச் சேர்ந்த மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை றஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் றவாஹா பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் இணைந்து முன்னெடுத்தனர்.

சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இன்றைய தினம் (03) றஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாக சபையினரால் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் முன்னிலையில் அட்டாளைச்சேனையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இளைஞர் அமைப்பினரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் றஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ. அன்சார், தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். பாயிஸ், அதிபர் எம்.எஸ். பாஹிம், ஆசிரியர்கள் ஜே. பஸ்மீர், மெளலவி என். நிசாத் ஆகியோர் உட்பட இரு பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.