வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையாக மழை பெய்யக்கூடும் என வானிலை திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் மதியம் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகபட்சம் 75 மில்லீமீட்டர் வரை அதிக மழை பதிவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் குருநாகல், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் அபாயங்கள் ஏற்படும்நிலை காணப்படுவதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.