வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அதேபோல் மாத்தளை மாவட்டத்திலும் படிப்படியாக பல்வேறு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றரைத் தாண்டிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் காலையில் பனிமூட்டம் காணப்படலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் பலத்த காற்று வீசுதல் மற்றும் மின்னல் தாக்கம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.