சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மின்னல் எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் திடீர் பலத்த காற்று வீசும் அபாயமும் உள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.