Top News
| பிட்டு கேட்ட கணவனின் மண்டையை கோடாரியால் பதம் பார்த்த மனைவி | | கல்விப் பிரச்சினைகள் குறித்து கல்முனை கல்வி வலய அதிபர்கள் எம்.எஸ். உதுமாலெப்பை எம்பியுடன் ஆலோசனை | | நீங்கள் எதிர்பார்த்திருந்த வசதியினை தற்போது வட்ஸப் அறிமுகம் செய்துள்ளது |
Dec 15, 2025

அடுத்து வரக்கூடிய 36 மணித்தியாலங்கள் தொடர்பான வானிலை அறிக்கை

Posted on December 11, 2025 by Admin | 185 Views

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருணாகல், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை நேரங்களில் சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் வாய்ப்பும் உள்ளது.

இடியுடன் கூடிய மழை நிலவும்போது தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடியதால், அவற்றால் உருவாகும் ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.