இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கம்பளை பகுதி மக்களின் நிலைமை குறித்து ஆராயும் ஆலோசனைக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் இன்று (14) கம்பளை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
கம்பளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித் தேசிய அமைப்பாளர் எம். எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ரியா மசூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



