Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் காரணமா?

Posted on December 15, 2025 by Hafees | 279 Views

இளைஞர்களிடையேயான திடீர் மரணங்களுக்கும், கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை இந்த ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

18 முதல் 45 வயது வரையுள்ளவர்களின் திடீர் மரணங்கள் குறித்து, வாய்வழி உடற்கூறு ஆய்வு, பிரேதப் பரிசோதனைப் படமெடுத்தல், வழக்கமான உடற்கூறு ஆய்வு மற்றும் விரிவான பரிசோதனைகள் மூலம் ஆய்வாளர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆய்வின்படி, தடுப்பூசி நிலைக்கும் இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்பு எதுவும் காணப்படவில்லை.

பெரும்பாலான மரணங்கள்,
இருதய நோய் உட்பட நன்கு அறியப்பட்ட மருத்துவ நிலைமைகளால் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.