தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த விமானம் மீண்டும் திருப்பப்பட்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
202 பயணிகளை ஏற்றிச் சென்ற குறித்த விமானத்தில் பயணத்தின் போது திடீரென தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விமானம் உடனடியாகத் திருப்பப்பட்டு அவசரகால நடைமுறைகளின் கீழ் சில மணித்தியாலங்கள் வானில் வட்டமிட்ட பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.