(அட்டாளைச்சேனை செய்தியாளர் ரிழா)
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் ஆறு வட்டாரங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற ஆறு வட்டார மக்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பதுடன் பிரதேச சபைத் தேர்தல் காலப்பகுதியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் விசேட வேலைத்திட்டம் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் அவ்வட்டார உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ் வேலைத்திட்டத்தின் மூன்றாவது நிகழ்வு அல் முனீரா வட்டாரம் (அட்டாளைச்சேனை 02, 06, 11) தொடர்பான கலந்துரையாடல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் ரியா மசூர் அவர்களின் ஏற்பாட்டில் இன்று(27) இரவு 07:30 மணிக்கு அட்டாளைச்சேனை07, Sarah beach resortயில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.