நேற்று சனிக்கிழமை (27) பிற்பகல் பெலியத்திலிருந்து மருதானை நோக்கிச் சென்ற அதிவேக ரயிலுடன் ஒரு கார் மோதிய விபத்தில் மூவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலபிட்டிய மற்றும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரில் பயணித்த தந்தை, மகன் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர் ஒருவரே காயமடைந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் ரயில் கடவையில் போக்குவரத்து விளக்குகள் மற்றும் அபாய எச்சரிக்கை மணி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு சமிக்ஞைகளும் முறையாகச் செயற்பட்டிருந்த போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் கார் ரயில் கடவைக்குள் நுழைந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மோதலின் தீவிரத்தால் கார் தண்டவாளத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் பொலிஸார் மேலதிகமாக தெரிவித்தனர்.