(அபூ உமர்)
அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவட்டாரத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் வெற்றி பெற்ற அல்ஹாஜ் ஏ.எல். பாயிஸ் (ADE) அவர்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாத்சல்ய மகிழ்வுவிழாவையும், துஆப் பிரார்த்தனையையும் நேற்று (2025 மே 15) ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டார். மேலும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சூரா சபைச் செயலாளர் யூ.எல். வாஹித் (ஓய்வுபெற்ற ADE), மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள் ஐ.எல். அஸ்வர் சாலிஹ், ஏ.எஸ்.எம். உவைஸ், ஏ.சி. நியாஸ், பட்டியல் வேட்பாளர்கள், தொழிலதிபர் ஏ.கே. அமீர், கிளைக்குழுத் தலைவர்கள், செயலாளர்கள், உலமாக்கள், மத்திய குழு உறுப்பினர்கள், கட்சி போராளிகள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் திரளாக பங்கேற்றனர்.
வெற்றியை உறுதிப்படுத்திய வாக்காளர்களின் நம்பிக்கைக்கு நன்றி கூறும் வகையில், உணர்வுபூர்வமாகவும் உள்ளார்ந்த நன்றியுடன் இந் நிகழ்வு நடைபெற்றது.