House of English நிறுவனத்தின் வருடாந்த விடுகை விழா நேற்று (03) அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ரி. நகீல் (ஓய்வு பெற்ற ADE) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை கிளையின் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். ஜெனீஸ் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பு, நெறிப்படுத்தலுடன் கல்வி வளர்ச்சியையும் மாணவர்களின் திறன் மேம்பாட்டையும் முன்னிறுத்தும் நோக்குடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி வைத்ததுடன் அவர் தனது உரையில், இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில மொழித் திறன் இளைஞர்களின் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு அடிப்படை கருவியாக விளங்குவதாகவும் House of English போன்ற நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அளிக்கும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.
அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஏ.எல். பாயிஸ் (ADE), ஓய்வு நிலை அதிபர் கிதுர் மொஹம்மட், அதிபர்களான ஏ.எல். பாயிஸ், எம்.எஸ்.எம். பாஹிம், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எஸ். சியாத் உள்ளிட்ட பல கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
விழாவின் போது மாணவர்களின் மொழித் திறனை வெளிப்படுத்தும் உரை நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை களைகட்டச் செய்ததுடன் நிறுவனத்தின் கல்விச் சேவைக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.






