சர்ச்சைக்குரிய தரம் 6 பாடத்திட்ட உள்ளடக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை அறிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.