Top News
| இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிபதியும் அவரது மனைவியும் ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை புதன் கிழமை தொடங்குகிறது | | “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு |
Aug 19, 2025

ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

Posted on June 7, 2025 by Admin | 92 Views

ஹஜ் பெருநாள் இஸ்லாமியர்களின் பக்தி, தியாகத்தின் பேரின்பம் சுமந்த ஒரு புனித நாளாகவும், இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றான மக்கா யாத்திரையின் அடையாளமாகவும் கொண்டாடப்படுகிறது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இந்த புனித நாளுக்காக வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில், ஹஜ் பெருநாள் இப்ராஹிம் நபியின் அல்லாஹ் மீதான பக்தியையும், அவரது தியாகத்தையும் நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“மதத்தின் நோக்கம் மனித சமூகத்தில் மனித நேயம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதாகும். ஹஜ் யாத்திரை அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் ஆன்மிக ஒற்றுமையை எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்,” எனத் தெரிவித்த அவர்,

“உண்டு – இல்லை என்ற வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தையே முன்னிலைப்படுத்தும் ஹஜ் பெருநாள், உலக அமைதிக்கு வழிகாட்டும் ஒரு பொன்மொழியாக இருக்கிறது,” என்றும் குறிப்பிட்டார்.

மனிதமையை மையமாகக் கொண்ட இந்த புனித நாளில், சகலரும் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர அன்பை வளர்த்தெடுக்க ஜனாதிபதி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.