(அட்டாளைச்சேனை செய்தியாளர் வாஜித்)
“கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களிடையே நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காணும் நோக்குடன் அட்டாளைச்சேனை 08 (கோணாவத்தை) பிரதேச மக்களின் முக்கிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நேற்று (04.01.2026) நடைபெற்றது.
இம் மக்கள் சந்திப்பில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கெளரவ உறுப்பினர்களான அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்பாளர் றியா மசூர், ஏ.எல். பாயிஸ், கட்சியின் அட்டாளைச்சேனை 08ம் பிரிவு அமைப்பாளர் எஸ்.ஐ. றியாஸ், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் என்.கே.எம்.மிஸ்வர், அட்டாளைச்சேனை 08ம் பிரிவு கிராம சேவகர் எம். சஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், அட்டாளைச்சேனை 08ம் பிரிவு கிளைக் குழு தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக வீரர்கள், கோணாவத்தை பிரதேச பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இச் சந்திப்பின் போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.





