(திருக்கோவில் செய்தியாளர் – நாகேஸ்)
புதிய கலைத்திட்ட மறுசீரமைப்பு – 2026 தொடர்பாக தரம் 1 இற்குச் சேர்க்கப்படவுள்ள மாணவர்களின் பெற்றோருக்காகத் தயாரிக்கப்பட்ட பெற்றோர் திசைமுகப்படுத்தும் கையேட்டின் முதல் பிரதியை திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். அம்ஜத் கான் அவர்களிடமிருந்து திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
மேற்படி கையேடு திருக்கோவில் கல்வி வலயத்தில் தரம் 1 இற்கு புதிதாக இணைக்கப்படும் அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் வழங்கப்படவுள்ளது