Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

எரிபொருள் விலையில் அதிகரிப்பா?

Posted on January 18, 2026 by Admin | 117 Views

ஈரானுடன் வர்த்தக உறவுகளை கொண்ட நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள 25 சதவீத வரி விதிப்பு இலங்கையை நேரடியாக பாதிக்காது இலங்கை தற்போது ஈரானிலிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவில்லை எனவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

முறையான விலைமனுக் கோரல் நடைமுறைகளின் கீழ் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து தற்போது இலங்கை எரிபொருளை கொள்வனவு செய்து வருவதாகவும் ஈரானுடன் தனிப்பட்ட எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இலங்கை தனது மொத்த எரிபொருள் தேவையின் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவை இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான தொகை செலவிடப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.