(அட்டாளைச்சேனை செய்தியாளர்- வாஜித்)
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் பதிவாளராக சிறப்பாக கடமையாற்றி வந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஏ.சி.எம். றகீப் (MSO – SUPRA) அவர்கள் அண்மையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக பிரதேச செயலாளர் திரு. ரீ. கஜேந்திரன் முன்னிலையில் தனது புதிய கடமைகளைக் பொறுப்பேற்றார்.
அரச துறை நிர்வாகத்தில் அனுபவமிக்க அதிகாரியாக அறியப்படும் எம்.ஏ.சி.எம். றகீப் அவர்கள் நிர்வாகத் துறைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியதுடன் ஒழுக்கம், நேர்த்தி மற்றும் மக்கள் சேவையில் அர்ப்பணிப்பு கொண்ட உத்தியோகத்தராகப் பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பொறுப்பேற்பு நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. ரெட்னம் சுவாகர், கணக்காளர் திரு. ஏ. எல். றிபாஸ், அக்கரைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆர். எம். நளீல், அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியின் பதிவாளர் திரு. எச். எம். ஏ. ஹசன், அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் பதிவாளர் திருமதி மங்களா உள்ளிட்ட பல அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

