இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 (T20) தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (28) அறிவித்துள்ளது. இந்தத் தொடருக்காக தசுன் ஷானக்க தலைமையில் 16 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இந்தத் தொடரின் போட்டிகள் ஜனவரி 30, பெப்ரவரி 1 மற்றும் 3 ஆகிய திகதிகளில் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை T20 குழாமில், பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷான், மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்