Top News
| நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் | | மாணவர்களுக்கு மகிழ்ச்சியளித்த அட்டாளைச்சேனை ரிபி ஜாயா வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா | | மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சூடுபிடித்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் |
Jan 31, 2026

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடல்

Posted on January 29, 2026 by Admin | 101 Views

 (சாய்ந்தமருது செய்தியாளர் – கமால்)

சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (29.01.2026) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர் (PC), எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், மாவட்ட பிரதான கணக்காளர் ஏ.எல்.மஹ்ரூப், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்