உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதன் எதிரொலியாக உள்நாட்டு தங்க விலைகளும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. தங்கச் சந்தை தரவுகளின்படி நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 20,000 ரூபாவால் குறைந்துள்ளது.
அதன்படி இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் நிலவிய விலைப்படி 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 368,000 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் (29) இதன் விலை 386,400 ரூபாயாக பதிவாகியிருந்தது.
இதற்கிடையில் நேற்று 420,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 400,000 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.