Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அரசுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள்

Posted on June 8, 2025 by Admin | 204 Views

தனியார் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முறையான தேர்வு முறைமையின்றியே ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கம் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், “இது கல்வித்துறையில் நேர்மையையும் தரத்தையும் பாதிக்கும் செயலாகும். கல்வித் தகுதியின் அடிப்படையில், சீரான முறைப்படி மட்டுமே நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்த நியமனங்கள் குறித்து அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட விடயத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.