Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

சுவாச நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Posted on June 9, 2025 by Admin | 125 Views

தற்போதைய மழை மற்றும் நிலவும் ஈரமான வானிலையால், சுவாச தொடர்பான நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானத் துறை சிறப்பு வைத்தியர் டாக்டர் அத்துல லியனபத்திரன பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது முகக்கவசம் அணிந்து, பிறர் மீது தொற்று பரவாமல் தடுப்பது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (முதலாவதாக நீரிழிவு, சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவை) சுவாச நோய்கள் அடைய அதிக ஆபத்து இருப்பதால், இந்த தரப்பினர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும், சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்றும், தாமதம் இன்றி சிகிச்சை பெற வேண்டும் என்றும் டாக்டர் அத்துல வலியுறுத்தினார்.