Top News
| “வருகையினை கைரேகையினூடாக பதிவதனை ஏற்க மறுப்பவர்கள் வேறு வேலை தேடலாம்” அமைச்சரவை பேச்சாளர் தபால் ஊழியர்களுக்கு அறிவிப்பு | | கல்லோயா திட்டம் மேம்பாடு குறித்து முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையில் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு |
Aug 19, 2025

இன்று மழையுடன் கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எச்சரிக்கை

Posted on June 9, 2025 by Hafees | 59 Views

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அத்தோடு, நாளை (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும், நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.