Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

பஸ்ஸில் பெண்களை சீண்டிய இளைஞர்கள் கைது

Posted on June 9, 2025 by Admin | 102 Views

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸில், பெண்கள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு இளைஞர்கள், அவர்களை கண்டித்த பஸ் நடத்துனரை பொல்லால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்ததாவது, போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்த இரு இளைஞர்கள், பஸ்ஸில் பயணித்த பெண்களிடம் மோசமான முறையில் நடந்து கொண்டனர். இதனைக் கண்டித்த பஸ் நடத்துனர் கடும் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தார்.

உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பஸ் நடத்துனர் தற்போது சிகிச்சையில் உள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகத்துக்குரிய இளைஞர்களும் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.