Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நிந்தவூர் NSC அணி சாம்பியன் பட்டம் வென்றது!

Posted on June 10, 2025 by Admin | 457 Views

(ஹபீஸ்)

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) அன்று அட்டாளைச்சேனை – 06 கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் நிந்தவூர் NSC விளையாட்டு கழக அணி, சிறப்பான ஆட்டத்துடன் சாம்பியன் பட்டத்தை வென்று களைகட்டியது. இரண்டாம் இடத்தை ஆற்றல் மிக்க ஆட்டத்துடன் அக்கரைப்பற்று Triple BBB அணி கைப்பற்றியது.

இறுதிப் போட்டியின் பிரதம அதிதியாக SLMCயின் பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கு மரியாதை அளித்தார்.

விசேட அதிதிகளாக Saad Travels and Tours நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் திரு A. அமீர் அவர்கள், கழக ஆலோசகர் ML. இனாமுல்லாஹ், Nest International நிறுவன முகாமைத்துவ பணிப்பாளரும் கழக நிர்வாக உறுப்பினருமான Engineer NM. சப்னாஸ், ஓய்வுபெற்ற அதிபர் MA. அன்சார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியின் நடுவர்களாக MLM. சியாத், நஜா, வர்ணனையாளர்களாக மின்ஹாஜ், நப்ராஸ், ஸ்கோரினை செவ்வென றிகாஸ் பதிவு செய்தார்

இப்போட்டியை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவிய  நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், ஆலோசகர்கள், மற்றும் உதவிய அனைவருக்கும், மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகம் தனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளது.

இப்போட்டியானது கிரிக்கெட்டின் வளர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.