Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி இன்று மாலை கோலாகலமாக தொடக்கம்!

Posted on June 10, 2025 by Admin | 348 Views

வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட 5ஆவது புத்தகக் கண்காட்சி இன்று மாலை (10.06.2025) தொடங்கவுள்ளது.

அக்கறைப்பற்று Cargills Food City முன்பாக உள்ள நீர்ப் பூங்கா வளாகத்தில் மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள தொடக்கவிழா, பல்வேறு முக்கிய அதிதிகளின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

தொடக்க விழாவின் பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்து கொண்டு விழாவுக்கு மரியாதை செய்யவுள்ளார்.

இவருடன் கௌரவ அதிதியாக நீதிபதி பயாஸ் றஸாக், விசேட அதிதியாக சமுத்ர புத்தகசாலையின் பணிப்பாளர் திருமதி சமுத்ரிகா சில்வாம் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த புத்தகக் கண்காட்சி ஜூன் 10 முதல் 15ஆம் திகதி வரை, தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்களுக்கு திறந்துவைக்கப்படும்.

பல்துறை நூல்கள், சிறார் வாசிப்பு, இலக்கியம், அறிவியல், வரலாறு, நாவல்கள் உள்ளிட்ட நூல்கள் நூற்றுக்கணக்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

வாசிக்கும் சமூகமே வளர்கிறது!

இந்த நிகழ்வு, வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, அக்கரைப்பற்றின் கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டிலும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.