Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

ரணில் விக்ரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Posted on June 11, 2025 by Admin | 183 Views

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க இன்று (ஜூன் 11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல, தனது அமைச்சுப் பொறுப்பின்போது தரமற்ற மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறி முறைப்பாடு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் அமைச்சராக இருந்த பலரும் தற்போது வாக்குமூலம் வழங்கி வருகின்றனர்.

இதற்கமைவாக, அமைச்சர் ஒருவர் மட்டுமல்ல, முழுமையான அமைச்சரவை பொறுப்பும் இந்நிலையில் பரிசீலிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதிலிருந்து, கூட்டுப் பொறுப்பை விளக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்கவிடமும் இன்று வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.