Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

AI ஊடாக 16 வயதுடைய மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக வெளியிட்ட மாணவர்கள் கைது

Posted on June 11, 2025 by Admin | 212 Views

AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்திய இரு பள்ளி மாணவர்கள் கைது – 16 வயது மாணவியரின் புகைப்படங்களை முறைகேடாக பரப்பிய சம்பவம்

ஹொரணை பகுதியில் 16 வயதான நால்வர் மாணவியரின் முகங்களை AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாற்றி உருவாக்கப்பட்ட தவறான (முறையற்ற) புகைப்படங்களை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததற்காக, இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகள் படிக்கும் பாடசாலையிலேயே கல்வி பயிலும் மாணவன் ஒருவரும், ஹொரணை பகுதியில் உள்ள வேறொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவனுமாவர். அவர்களை ஹொரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி சந்தன கலன்சூரிய அவர்களால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

ஹொரணையில் உள்ள புகழ்பெற்ற பாடசாலையின் மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். AI தொழில்நுட்பத்தின் மூலம் தனது மகளின் முகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தவறான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும், இதனால் மாணவி கடுமையான மன அழுத்தத்துடன் வகுப்புகளுக்குச் செல்ல தயங்குகிறாளெனவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்த முறைப்பாட்டிற்கு பிறகு, அதே பாடசாலையைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முறைப்பாடுகள் அளித்தனர். தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து விசாரணை நடத்திய பொலிஸார், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவியரின் முகங்களை முறைதவறிய புகைப்படங்களாக மாற்றிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவை முற்றிலும் வெளிப்பட்டுள்ளது.