Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

மழைக்காலத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பு குறித்து தேசிய டெங்கு பிரிவு எச்சரிக்கை

Posted on June 11, 2025 by Hafees | 562 Views

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜூன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கடந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 25,259 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.