Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பலாங்கொடை பாடசாலையில் மரக்கிளை விழுந்து மாணவர் உயிரிழப்பு

Posted on June 12, 2025 by Hafees | 157 Views

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (12) மதியம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை பொலிசார் தெரிவித்தனர்.

இறந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.