Top News
| அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் |
Aug 18, 2025

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இலங்கையின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்

Posted on June 13, 2025 by Admin | 125 Views

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை பல் வேறு நாடுகளின் ஆதரவுடன் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தும் தீர்மானத்தை நேற்று (12-06-2025) நிறைவேற்றியது.

ஸ்பெயின் முன்வைத்திருந்த இந்த தீர்மானத்திற்கு இலங்கை உள்ளிட்ட 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதே நேரத்தில் 12 நாடுகள் எதிர்ப்பையும், 19 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் தவிர்ந்தன.

இந்த தீர்மானம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்மூட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் ஏதுவாக அமையும் என கூறப்படுகிறது.