பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், நாளை (மே 17) மீண்டும் தொடங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ளது.
சில கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தொடரை மீள ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் போட்டியில் Royal Challengers Bengaluru (RCB) மற்றும் Kolkata Knight Riders (KKR) அணிகள் மோதவுள்ளன.
தற்போது புள்ளிப் பட்டியலில் RCB அணி இரண்டாம் இடத்தில் இருப்பதோடு, KKR அணி ஆறாம் இடத்தில் உள்ளது. இரு அணிகளும் பிளேஆஃப்ஸ் வாய்ப்பை உறுதிசெய்யும் நோக்கில் மோதவுள்ளதால் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.