Top News
| வான வேடிக்கையான துடுப்பாட்டத்தினால் வீரமுனை மின்னொளி மென்பந்து சுற்றுப்போட்டியை கைப்பற்றிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி | | முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் |
Aug 18, 2025

ஈரான் எனும் நாடு இருக்க வேண்டும் என்றால் உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Posted on June 14, 2025 by Admin | 119 Views

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தாமதிக்காமல் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “ஈரானுக்கு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்கெனவே வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை தவிர்த்து விட்டனர். சில இராணுவத் தலைவர்கள், வீரர்களைப் போல் அட்டகாசமாக பேசினர் – இன்று அவர்கள் உயிரோடில்லை,” என அவர் தெரிவித்தார்.

மேலும், “ஈரான் நிலைத்திருக்க விரும்பினால், மேலும் உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் நிகழ வேண்டாம் என நினைத்தால், இப்போது இருந்தே அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்,” என்றார்.