இறக்காமம் பிரதேச செயலகத்தில் இன்று (16.05.2025) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டம், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸானின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் மன்ஜுல ரத்நாயகாவின் தலைமையில் நடத்தப்பட்டது.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ. ஆதம்பாவா , எம்.ஏ.எம். தாஹிர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன், பல அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில், இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்தி, பொதுமக்கள் சேவைகள் மற்றும் நிர்வாக மேலாண்மை குறித்து முக்கியமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்வுகள், பிரதேச வளர்ச்சிக்குத் துரிதம் கொடுக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.